Pages
சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்
கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி
புத்திசாலி குழந்தை பிறக்க...
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தாய் உணவு எடுத்துக்கொள்வது சரி; ஆனால், அது எந்த அளவுக்குக் குழந்தையின் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும்?
* ''கரு உருவான 20வது நாளில் வளர ஆரம்பிக்கும் மூளை, 28-வது நாளுக்குள்ளேயே அந்தக் குழந்தை அதன் வாழ்நாள் முழுவதும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடித்தள வேலைகள் மொத்தத்தையும் முடித்துவிடுகிறது.
* இதனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே பெண் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் குழந்தை எப்படிப் பிறக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கலாம்''.
* ''குழந்தை புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது, முதல் ஒரு மாத காலத்தில் கிடைக்கிற ஆரோக்கியத்தைப் பொறுத்துதான் அமைகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவு நோய், தைராய்டு சுரப்பியில் உண்டாகிற ஏற்ற இறக்கம், சரியான ஊட்டச்சத்து இல்லாமை...
இவை எல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தடை செய்யக்கூடியவை. இருபது நாள் கருவில் வளர ஆரம்பிக்கும் மூளை, ஏழு வயது ஆகும்போது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது.
குழந்தை பிறந்ததும் தாய்ப் பால் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துவதற்குக் காரணம், அதில் இருக்கும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள், மூளை வேகமாக இயங்கத் தூண்டுதலாக இருக்கும் என்ப தால்தான். பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஆணோ, பெண்ணோ... அந்தக் குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும்!
கர்ப்பிணிகள் உடல் எடையை கவனிங்க....
பெண்கள் திருமணத்தின் போதோ, கர்ப்பமாக இருக்கும் போதோ எவ்வளவு தான் ஒல்லியாக இருந்தாலும், பிரசவத்திற்குப் பின் அவர்கள் அதேப் போல் இருப்பதில்லை. கர்ப்பமாக இருக்கும் போது, அடிக்கடி உடல் எடையை பார்க்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் குண்டாவதைத் தடுக்கலாம்.
ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது கண்டதை சாப்பிட்டு, ஒரு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறோம். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, நிறைய பசி எடுப்பது போல் தோன்றும். கண்ணில் பார்ப்பதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தோன்றும். அதிலும் சில நல்ல உணவுகளான சாக்லேட், வறுத்த மற்றும் காரமான உணவுகள்.
ஆனால் இவை அனைத்தும் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் இவை ஆரோக்கியம் தான், சாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும். ஏனெனில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள். ஆகவே அவற்றை சாப்பிட்டு மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றை சற்று குறைவாக வைத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது.
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, சாதாரண எடையை விட 12-14 கிலோ அதிகமாக இருக்கும். சிலசமயங்களில் 12 கிலோ கூட எடை இல்லாமல் இருக்கும். ஏனெனில் அது குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்தது. குழந்தை வளர வளர தான் எடை அதிகரிக்கும். அதிலும் முதல் மூன்று மாதங்களில் 3 கிலோ எடை அதிகரிக்க வேண்டும்.
அதன் பிறகு வாரத்திற்கு 1/2 கிலோ முதல் 1 கிலோ வரை அதிகரிக்கும். ஆனால் இது சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஆனால் இது மாதிரி எடை கூடினால் நல்லது. எப்போதும் ஆரோக்கியளளறு உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான், எப்போதுமே ஒரு நல்ல தோற்றத்தில் இருக்க முடியும். மேலும் எந்த காரணத்தைக் கொண்டும், வீட்டு வேலையை செய்வதை நிறுத்திவிட வேண்டாம். அதற்காக மிகவும் கடுமையான வேலையையும் செய்ய கூடாது
தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள்
35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பமா?
35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பம் தரிக்கும் பெண்களை ஸ்பெஷல் கவனம் கொடுத்து தனியாக பரிசோதனைகள் மற்றும் ட்ரீட்மெண்ட்கள் தர வேண்டும்.
* வலித்துத்தான் பிரசவம் ஆகும். ஆகவே வலி பொறுத்துத்தான் ஆகவேண்டும். மருத்துவருடன் ஒத்துழைத்தால் நார்மலாகப் பிரசவம் ஆகும். சிசேரியனைத் தவிர்க்கலாம்.
* ஏதோ ஒரு சிக்கலான காரணத்துக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிசேரியனுக்கு அட்வைஸ் செய்தால், அது தாய் சேய் நலத்திற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பயப்படக்கூடாது.
* கர்ப்பமான நேரத்தில் தாய் அமைதியான மனதுடன், தெளிவான எண்ணங்களுடன் மனசுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் தாய்மை ஒரு இனிய அனுபவம் ஆக இருக்கும்
மாதுளையின் மகத்துவம்!
தக்காளியின் மருத்துவ பயன்கள்...
காய்கறிகளில் மிகவும் எளிதிலும், விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம்.
இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது. இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் 'சிட்ரிக்' அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது. மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.
சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது. பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.
தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது. மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.
இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன. தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறதுவைட்டமின் 'சி' குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும்.
சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் 'சி' தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.
பற்களை பாதுகாப்பது எப்படி?
பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.
பொதுவாக பற்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணங்களாகின்றன. அதிலும் அவற்றை உண்பதால், பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு, பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தையாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் மாற்றுகிறது.
ஆகவே அத்தகைய உணவுகளை உண்ட பின், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுப் பொருட்களை நீக்க டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது நல்லது. அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொள்ளும்.
அவ்வாறு மாட்டிக் கொள்வதை நீக்க முடியாமல் இருக்கும். மேலும் அவை பற்களில் இருப்பதால், அதிக எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது.
உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். சீஸை சாப்பிடும் போது, அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது.
அனைவருக்குமே சாக்லேட் மிகவும் பிடிக்கும். சாக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை தங்க வைக்கும். ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.
பெண்கள் இரவில் மட்டும் செக்ஸ்சை விரும்புவது ஏன்?
கறிவேப்பிலையின் மகத்துவம்
* கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும்.
* கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு ஆகியவை மருத்துவத்திற்கு சிறந்தது. கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் தினம் 4 வேளைக் குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், சுரம், வாதசுரம் தீரும்.
* ஒரு பிடி கறிவேப்பிலை சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறும் வயிற்றில் 45 நாட்கள் கொடுக்கப் பிட்ட மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும். கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்கரைப் பொடி கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர நீர் கோவை சூதக வாய்வு தீரும்
பாட்டி வைத்தியம் பலன் தரும்!
பழங்களில் உள்ள சத்துகள்
ஆப்பிள்: வைட்டமின்கள் ஏ.சி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித் தன்மைக்கும் உதவும்.
தர்பூசணி: இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்.
புளி: இரும்பு 17 மி.கி. கால்ஷியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக் குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.
சீத்தாப் பழம்: பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் வைட்டமின்கள் பி, சி-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.
அண்ணாசிப் பழம்: இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம், கால்ஷியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
மாதுளம் பழம்: பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்ஷியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. கால்ஷியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.
தசை மற்றும் ஜவ்வினால் ஏற்படும் பிரச்சினைகள்
முதுகெலும்பை அனைத்திருக்கும் தசைகள் மற்றும் ஜவ்வுகளின் ரணத்தால் ஏற்படும் முதுகு வலியானது. சாதாரணமாக 3 மாதங்களுக்கு உட்பட்ட அக்யூட் பெயினாகத் தான் இருக்கும். இதனால் நடு முதுகில் வலியும், முதுகின் இரு புறமுள்ள தசைகளின் இறுக்கத்தால் முதுகு அசைவின் போது வேதனையும் ஏற்பட்டு முதுகை முழுவதும் அசைய விடாமல் தடுக்கும்.
இதற்கு சாதாரண வலி நிவாரண மற்றும் தசை இறுக்கத்தை குறைக்கும் மாத்திரைகள், உடற்பயிற்சி மற்றும் இதர பிஸியோதெரபியும் போதுமானது. இதே போன்று மையோ பேசியல் பெயின் சின்ரோம் என்று ஒரு நோய் இருக்கிறது.
இது அதிக வேலை செய்வதால் சரியான நிலையை நிற்கும் போதும் படுக்கும் போதும், உட்காரும் போதும், கடைபிடிக்காமல் இருப்பதால் மற்றும் மன அழுத்தத்தாலும் ஏற்படுகிறது. இதை எந்த பரிசோதனையாலும் கண்டு பிடிக்க முடியாது.
முதுகில் சில இடங்களில் தொடும் போதே அதீத வலியும் (TRIGGER POINT)மற்றும் தசையில் வலியுடன் கூடிய இறுக்கம் (TAUGHT BAND) காணப்படும். இதற்கு மேற் கூறிய சாதாரண சிகிச்சைகளுடன் ட்ரிகர் பாயின்ட் இன்செக்ஷன் எனப்படும் சிகிச்சைகள் நிரந்தர தீர்வு தரும்.
முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
வாழ்வில் ஒரு முறையேனும் முதுகுவலி வராதவர் என்று நம்மில் யாருமில்லை. ஆதி மனிதன் இரட்டை கால்களால் நேராக நிற்க முயன்ற போதே முதுகுவலியையும் சேர்த்துக் கொண்டான். இத்தகைய பொதுவான பிரச்சனையான முதுகுவலி, முப்பது சதவிதம் பேருக்கு சாதாரண வலி மாத்திரைகள் மற்றும் உடல் பயிற்சிகளினாலேயே சரியாகி விடுகிறது.
10 சதவீதம் பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. மீதமுள்ள 60 சதவீதத்தினர் சாதாரண வலி மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொண்டு வாழ்நாளில் புதிய புதிய நோய்களை வரவழைத்து கொள்கின்றனர். இவர்கள், எதை உண்ணுவதால் பித்தம் தீரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உடன் இருப்போர் சொல்வதையெல்லாம் கடை பிடிக்கின்றனர்.
மனித முதுகெலும்புக் கூட்டின் அமைப்பு:
இது 33 வளையம் போன்ற சிறுசிறு எழும்புகளை ஒன்று மேல் ஒன்றாக அடுக்கி வைத்ததை போன்ற அமைப்பு. இது நூல் பிடித்ததைப் போல் நேராக இல்லாமல், தேவைக் கேற்ப கழுத்து பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் முன்புறம் வளைத்தும் நெஞ்சு மற்றும் கீழ் இடுப்புப் பகுதியில் பின்புறம் வளைந்தும் காணப்படும்.
இந்த பாதுகாப்பான எலும்பு கூட்டு தொடரின் உள்ளே தான் தண்டு வடம் அமர்ந்து கொண்டு மூளையில் இருந்து கை, கால் மற்றும் இதர உறுப்புகளுக்கு நரம்புகளை எடுத்து செல்கிறது. இந்த எலும்பு தொடரின் இரு பக்கத்திலும் உள்ள துளைகள் வழியாக நரம்புகள் வெளியேறுகின்றன.
இந்த முதுகெலும்பு தொடரில் எலும்புகள் ஒன்று மேல்ஒன்று இணைய முக்காலி போன்று மூன்று இணைப்புகள் உள்ளது. முன்புற இணைப்பாக இரு எலும்புகளுக்கு இடைவெளியாக டிஸ்க் எனப்படும் நடுப்புற தட்டு அமைந்து, உடம்பின் அதிர்ச்சியை உட்கிரகிக்கிறது. பின்புறமாக பேஸட் என்ற இரண்டு இணைப்புகள் உள்ளது.
முதுகு வலிக்கு மூல காரணம்:
முதுகுவலியானது முதுகெலும்பின் தொடர்ச்சியிலோ, எலும்புகளை சுற்றியுள்ள தசைகள் மற்றும் ஜவ்வுகளிலோ அல்லது முதுகெலும்புகளை பின்னிப் பிணைத்திருக்கும் தண்டு வட நரம்புகளிளோ தான் உற்பத்தியாகின்றன.
டிஸ்க் எனப்படும் நடுப்புறத்தட்டினால் ஏற்படும் பிரச்சினைகள்
டிஸ்க் என்பது ஜெல்லி போன்ற திரவப் பொருளான நியுக்ளியர் பல் போஷஸ்-ஐ நடுவில் கொண்டு வெளிப்புறத்தில் ரேடியல் டயர் போல சுற்று சுவராக ஆனுலஸ் பைப்ரோஸிஸ்சைக் கொண்டது. இந்த அமைப்பினால் நிற்கும் போதும் எடை தாங்கும் போதும் டிஸ்க் நடுவில் அமுங்கி நாலாப்புறமும் விரிவடைந்து ஒரு குஷன் போன்று உடல் பலுவை தாங்குகிறது.
இதில் எப்படி பிரச்சினை ஏற்படுகிறது என்று பார்த்தால், அதிக பளு தூக்குவதாலோ அதிகமான இருமல் தும்மலினாலோ வளைந்து நிமிர்ந்து அதிக வேலை செய்வதாலோ, ஷாக் அப்சர்பர் சரியில்லாத இரு சக்கர வாகனங்கள் ஒட்டுவதாலோ டிஸ்கில் ரணம் ஏற்பட்டு, பிதுங்குவதால் ஜெல்லி போன்ற திரவம் வெளியே கசிந்து பாஸ்போலைபேஸ் கி2 என்ற சுரப்பியை சுரக்க வைக்கிறது.
இந்த சுரப்பியினால் தான் வலி ஏற்படுகிறது. இந்த பிரச்சினை அதிகமாக இருபது வயது முதல் நாற்பது வயதினரை தாக்குகிறது . அதிலும் எல்.4 எல்.5 மற்றும் எல்.5 எஸ்1 என்ற டிஸ்குகளை தாக்குவதால் பின் தொடை, கென்டைகால், பாதம் மற்றும் முதுகிலும் வலி ஏற்படுத்துகிறது. இதை டிஸ்க் புளோலாபஸ் வித் சையாடிகா என்கிறோம்.
இதனால் முதுகுவலியுடன் கை கால்களில் பரவும் வலி, மரத்துப் போதல், வலு விழுத்தல, போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இருமும் போதும், தும்மும் போதும் உட்காரும் போதும் வலியை அதிகப்படுத்தும். படுத்த வாக்கில் முட்டிகளை மடக்காமல் காலை தூக்கும் போது, வலி அதிகமாகும். இதற்கு தற்காலிக ஒய்வு, வலி மாத்திரைகள், உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி போன்றவைகள் 6 மாதங்களுக்கு உட்பட் பிரச்சினைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
அதுவே க்ரானிக் பெயின் வகையை சேரும் போது, அதாவது நாள்பட்டு இருக்கும் போது, அறுவை சிகிச்சை இல்லாத ஊடுறுவும் சிகிச்சைகளாக எபிடூரல் இன்ஜெக்ஷன் (Epidural Injection) டிஸ்கோலைஸிஸ் (Discocysis) போன்ற அதிநவீன வலி நிவாரண சிகிச்சைகள் எந்த வித பக்க விளைவுகளும் இலலாமல் தீர்த்து விடும்.
அதிகப்படியான டிஸ்கு பிதுங்கி தண்டு வடத்தை அழுத்துவதை கம்ப்ரசிவ் மயிலோபதி என்கிறோம். அதுவே தண்டு வட முடிவில் இருக்கும் நரம்பு தண்டு வடத்தை அழுத்தும் போது அதை காடா இக்குனா சின்ரோம் என்கிறோம். இதனால் நடக்க முடியாமல் போவதும், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் பிரச்சுனை எற்படலாம். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சையே வழியாகும்.
முதுகெலும்பினால் ஏற்படும் பிரச்சினைகள்
வயதானாலே எலும்பு தேயும் என்பது தெரிந்ததே. இது முதுகெலும்பு தொடர்ச்சியிலும் ஏற்படுகிறது. இதனால் மட்டுமல்லாது மரபு வழி எலும்பு நோய்களாலும் முதுகில் அடிபடுவதாலும், 50 வயது நெருங்கியவர்களை ஸ்பைனல் கேனல் ஸ்டினோசிஸ் என்ற பிரச்சினை தாக்குகிறது.
இதில் தண்டுவடம் அமைந்துள்ள ஸ்பைனல் கேனல் என்ற நடுத்துவாரமோ அல்லது தண்டு வடத்திலிருந்து பிரிந்து நரம்பு வேர்கள் செல்லும் நியுரல் போரமினா என்னும் பக்கத் துவாரமோ குறுகி போகிறது. இதனால் தண்டு வடத்திலும் நரம்பு வேர்களிலும் அழுத்தம் உண்டாகி இரத்தம் செல்வதை தடை செய்கிறது.
இந்த பிரச்சினையால் பெரும்பாலும் தொடைப் பகுதி, கென்டைக்கால், மற்றும் பெரு விரல்வரை நரம்புகனை பாதித்து நடந்தாலே வலி (Claudication) ஏற்படுத்தும், இவர்கள் நடக்க பயப்படுவார்கள். இதற்கு அறுவை சிகிச்சையில்லாமல் எபிடூரல் இன்ஜெக்ஷன் கொடுக்கலாம். மேலும் பெர்குடேனியஸ் டிஸ்கெக்டமி செய்து மறு நாளே நடக்க வைக்கலாம்.
சிறுவயதினருக்கு முதுகெலிம்பின் பின் பகுதியில் பார்ஸ் இன்டெர் ஆர்டிகுளோரிஸ் என்ற இடத்தில் குறை ஏற்படுவதை ஸ்பாண்டிலோலைனில் என்கிறோம். இதனால் பின்புறம் சாயும் போது வலி ஏற்படுத்தும்.
முன்புறம் குனியும் போது வலி மறையும். இந்த பிரச்சினையால் ஒரு முதுகெலும்பு அதற்கு கீழ் உள்ள முதுகெலும்பை விட்டு தள்ளி போகும் வாய்ப்புள்ளது. இதை ஸ்பான்டிலோலிஸ் தெஸிஸ் என்கிறோம். இதற்கு தகுந்த பாதுகாப்பு பெல்ட் அணிவது அவசியம்.
முதுகெலும்பின் இணைப்பில் ஏற்படும் பிரச்சினைகள்
பேஸட் இணைப்பில் ஏற்படும் நோய்கள் முதுகுவலியின் 40 சதவீதக் காரணமாக உள்ளது. வயதாவதால் டிஸ்க்கில் உள்ள நீர் வற்றிப்போய் டிஸ்க்கின் (Disc) உயரம் குறைகிறது. இதனால் முக்காலி போன்றுள்ள இந்த இணைப்பில் மாறுதல் ஏற்பட்டு பின்புற இணைப்புகளான பேஸட் இணைப்பில் அதிக பளு உந்தப்பட்டு, பிரச்சினை ஏற்படுகிறது.
இதனால் முதுகை பின்புறம் சாய்க்கும் போதும் பக்கவாட்டில் திருப்பும் போதும் வலி ஏற்படுகிறது. இதை பொதுவாக எக்ஸ்ரே, சி.டி., எம்.ஆர்.ஐ. போன்ற ஆய்வுகள் கண்டுபிடிக்க தவறி விடுகிறது.
இதனால் டயக்னாஸ்டிக் பிளாக் என்ற கண்டுபிடிக்க உதவும் இன்ஜெக்ஷன் முறையில் துல்லியமாக கண்டறிந்து அதற்கு பேஸ்ட் இணைப்பில் இன்ஜெக்ஷன் சிகிச்சை மற்றும் ரேடியோ அலை பயன்படுத்தி மீடியல் பிரனச் பிளாக் (Medial Branch Bloce) எனப்படும் சிறப்பு சிகிச்சை களையும் வலி நிவாரண மருந்து வத்தில் செய்யப் படுகிது.
சேக்ரா இலியாக் இணைப்பு
கீழ் முதுகெலும்பும், இடுப்பு எலும்பும் இணையும் பகுதி சேக்ரோ இலியாக் இணைப்பு எனப்படும். இது வயதானவர்களுக்கு ஆர்திரைட்டிஸ் மற்றும் சிறுவயதினருக்கு கிழிசலும் ஏற்படும் போது தாங்க முடியாத வலி ஏற்படுத்தும். டயக்னாஸ்டிக் எனப்படும் கண்டறியும் ஊடுருவு முறை இல்லையேல் இதை கண்டறிவது கடினமே.
இதற்கும் நவீன சிகிச்சைகளான ரேடியோ அலை ஆபரேஷன் மற்றும் இணைப்பு இன்ஜெக்ஷன் முற்றிலும் சரி செய்கிறது. ஸ்பான்டிலோசிஸ், லிஸ்தஸிஸ், ஸ்பான்டியோ ஆர்த்ரோபதி போன்ற நோய்கள் முதுகெலும்பை தாக்குகின்றன. அவற்றையும் முறையே கண்டுபிடித்து நவீன மருத்துவம் மூலம் சரி செய்யலாம்.
கேன்சர் வலி
கேன்சர் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே நமது நினைவுக்கு வருவது மரணத்தைவிட மரணவலிதான். இந்த கேன்சர் வலியானது நியூரோபதிக் வகையை சேர்ந்தது. அதாவது நரம்புகளின் அமைப்பில் அல்லது இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகும். இதனால் சாதாரண வலி மருந்துகள் கட்டுப்படுத்தாது.
இப்போதுள்ள மருத்துவத்தில் கேன்சர் வலியை கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் அமைந்துள்ளன. ஏணி போன்ற விதியின் படிதான் சிகிச்சை அளிக்கிறோம். இதில் முதல் படியாக ஸ்டிராய்டு அல்லாத மருந்துகள், இரண்டாம் படியாக வலுவற்ற ஸ்டிராய்டு மற்றும் ஸ்டிராய்டு அல்லாத மருந்துகள் மூன்றாம் படியாக வலிமிகுந்த லுபியாயிட் மற்றும் ஸ்டிராய்டு அல்லாத மருந்துகளை உபயோகிக்க சொல்கிறது.
அவ்வாறு கடைப்பிடித்தாலும் 70 சதவீதம் தான் கேன்சர் வலியை கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. இன்று நவீன சிகிச்சைகளாக உருவெடுத்திருக்கும் வலி நிவாரண மருத்துவத்தில்தான் 100 சதவீதம் வலியை கட்டுப்படுத்தி கேன்சர் நோயாளியின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும்.
வாழ்நாளின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது எனினும் வாழ்வின் தரத்தை உயர்த்த இந்த நவீன மருத்துவம் மைல்கல்லே (தண்டுவடத்தில் உட்பதிக்கும் செயல் முறை) இதில் ஸ்டிராய்டு அல்லது மயக்க மருந்துகளை உடம்பில் வைத்து அதை பம்ப்பு மூலம் தண்டுவடத்திற்கு சிறுக சிறுக அனுப்பி வைத்து வலியே இல்லாமல் செய்து விடுகிறது.
நரம்பு சிகிச்சை:- இந்த வகையான சிகிச்சை யால் வலியை உணர செய்யும் நரம்புகளை நிரந்தரமாக அழிப்பதற்காக பீனால் ஆல்கஹால் லைலைன் போன்ற மருந்துகளை செலுத்தலாம். மாறாக கிரையோ நியூரோலை சிஸ் மற்றும் ரேடியோ அலை நியூரோலைஸிஸ் மிகவும் சிறந்த பலனை அளிக்கக் கூடியது.
இந்த நவீன முறையின் சிகிச்சை பலன்கள்:-
1. நீண்ட நாள் வலியில்லாமல் இருத்தல்.
2. அறுவை சிகிச்சை தவிர்க்கலாம்.
3. மருத்துவமனைக்கு அடிக்கடி செல்ல தேவையில்லை.
4. மருந்தில்லா வாழ்க்கை.