News Update :

தசை மற்றும் ஜவ்வினால் ஏற்படும் பிரச்சினைகள்

width="200"



முதுகெலும்பை அனைத்திருக்கும் தசைகள் மற்றும் ஜவ்வுகளின் ரணத்தால் ஏற்படும்  முதுகு வலியானது. சாதாரணமாக 3 மாதங்களுக்கு உட்பட்ட அக்யூட் பெயினாகத் தான் இருக்கும். இதனால் நடு முதுகில் வலியும், முதுகின் இரு புறமுள்ள தசைகளின் இறுக்கத்தால் முதுகு அசைவின் போது வேதனையும் ஏற்பட்டு முதுகை முழுவதும் அசைய விடாமல் தடுக்கும்.

இதற்கு சாதாரண வலி நிவாரண மற்றும் தசை இறுக்கத்தை குறைக்கும் மாத்திரைகள், உடற்பயிற்சி மற்றும் இதர பிஸியோதெரபியும்  போதுமானது. இதே போன்று மையோ பேசியல் பெயின் சின்ரோம் என்று ஒரு நோய் இருக்கிறது.

இது அதிக வேலை செய்வதால் சரியான நிலையை நிற்கும் போதும் படுக்கும் போதும், உட்காரும் போதும், கடைபிடிக்காமல் இருப்பதால் மற்றும் மன அழுத்தத்தாலும் ஏற்படுகிறது. இதை எந்த பரிசோதனையாலும் கண்டு பிடிக்க முடியாது.

முதுகில் சில இடங்களில் தொடும் போதே அதீத வலியும் (TRIGGER POINT)மற்றும் தசையில் வலியுடன் கூடிய  இறுக்கம் (TAUGHT BAND)  காணப்படும். இதற்கு  மேற் கூறிய  சாதாரண சிகிச்சைகளுடன் ட்ரிகர் பாயின்ட் இன்செக்ஷன் எனப்படும் சிகிச்சைகள் நிரந்தர தீர்வு தரும்.




 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.