News Update :

மாதுளையின் மகத்துவம்!

width="200"

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமானது மாதுளம் பழம். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற பழமாக இது உள்ளது.
 
மாதுளம் பழச்சாறு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாதுளம் பழச்சாறை தொடர்ந்து பருகி வந்தால் சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இதய நோயாளிகளுக்கும் மாதுளை ஏற்றது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மாதுளம் பழம் ஒரு நல்ல ஆன்டி ஆக்சிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.
 
சிறுநீரகப் பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு மாதுளம் பழச் சாறைத் தொடர்ந்து கொடுத்துப் பரிசோதித்த போது, அவர்களுக்கு சிறுநீரகத்துக்கு மட்டுமின்றி மேலும் பல நன்மைகளையும் மாதுளம் பழம் அளிப்பது தெரியவந்தது.




 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.