உடல் குளிர்ச்சிக்கு பலவிதமான கூல்டிரிங்ஸ் மற்றும் ஐஸ் பொருட்களை சாப்பிடுகின்றனர். இவை தவிர தண்ணீர் சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளும் உடலில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இந்த வகையில் வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீர்சத்து மிக்க காய்கறிகள் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அதேவேளையில் வெள்ளரிக்காய் சாண்ட்விச்சை ஒரு கப் டீயுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியான நிலையை அடையும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்த ஆய்வு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. கோடை காலத்தில் அங்குள்ள முக்கிய ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.
இவை தவிர உணவு தானியங்களை சாப்பிட்டாலும் உடலில் படிந்திருக்கும் வெப்பம் வெளியேறி குளிர்ச்சி ஏற்படும். அதில் உள்ள மெக்னீசியம், கால்சியம் போன்றவை வெப்பத்தை வெளியேற்றும் சக்தி கொண்டது என நிபுணர்கள் கூறியுள்ளளர்.