News Update :

ரத்தக்குழாய் அடைப்பை தடுக்க

width="200"


 
ரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு அதை சீராக வையுங்கள். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணை, தேங்காய், எண்ணை, முட்டை மஞ்சள்கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற்றை தவிர்த்திடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள்.
 
மதுபாட்டில்களை காலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணையில் பொரித்த உணவுகளையும், நெய், பாலில் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பு அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். இனிப்பான பழங்கள், கிழங்குகள், பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல் கூடாது.
 
இவற்றை விட மேலானது உடற்பயிற்சி, நாள்தோறும் காலை, மாலை அரை மணி நேரம் நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள். சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உணவு வகைகள் அதிகம் உட்கொள்வதை குறையுங்கள். உங்கள் இதயம் பாதுகாப்பாக இருக்கும்.




 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.