News Update :

இன்சுலின் தாமாக போட்டுக் கொள்வது எப்படி?

width="200"


 
முதலில் உங்கள் கைகளை நன்றாகக்கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும். உங்கள் இன்சுலின் சக்தி நிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ. இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ் நீங்கள் கலங்கலான இன்சுனைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.
 
இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும், தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும் காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும், ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.
 
இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும். தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுëதல் வராமல் ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.
 
உங்கள் உயிர் உங்கள் கையில்....
 
 நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும், மற்றவரைப் போல ஆரோக் கியமாக உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம். உங்கள் நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நபர் நீங்கள் தான் மருத்துவரும் மற்றவரும் மற்றவர்களும், உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அறிவுரை வழங்குவார்கள்.
 
நீங்கள் நோயுற்றிருந்தாலும் இன்சுலினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள், உங்களால் சாப்பிட முடியாத போது திரவநிலை உணவை எடுத்துக்கொள்ளுங்கள். சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது, சிகிச்சையின் முடிவுகளைத் தவறாமல் குறித்து வைத்துக்கொண்டால் தான் நீரிழிவை சிறப்பாக சமாளிக்க முடியும்.  
 
தவறாமல் பரிசோதனைகள் செய்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும் மிக முக்கியம். ஹைப்போக்களை சீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகள், பாதங்கள், கண்கள், பற்கள் மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும். சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.




 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.